பிரபல ஓவியர் மாருதி உடல்நலக்குறைவால் காலமானார்.!


பிரபல ஓவியர் மாருதி உடல்நலக்குறைவால் காலமானார்.!
x

பிரபல ஓவியரான மாருதி (86) உடல்நலக்குறைவால் காலமானார்.

புனே,

பிரபல ஓவியரான மாருதி (86) உடல்நலக்குறைவால் புனேவில் இன்று காலமானார். புதுக்கோட்டையில் பிறந்து, ரங்கநாதன் என்ற பெயரை கொண்ட அவர், பத்திரிகைகளில் மாருதி என்ற பெயரில் ஓவியங்களை வரைந்து புகழ்பெற்றார்.

உளியின் ஓசை, பெண் சிங்கம் திரைப்படங்களில் ஆடை வடிவமைப்பாளராகவும் ஓவியர் மாருதி பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை ஓவியர் மாருதி பெற்றுள்ளார். அவரது மறைவு, ஓவியர்கள் மற்றும் பத்திரிகை வாசகர்களுக்குப் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story