ஓடும் ரெயில்முன் பாய்ந்து விவசாயி தற்கொலை


ஓடும் ரெயில்முன் பாய்ந்து விவசாயி தற்கொலை
x

ஓடும் ரெயில்முன் பாய்ந்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

மண்டியா:

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா டவுன் மாரிகுடி பகுதியில் வசித்து வந்தவர் மனோஜ்(வயது 30). விவசாயியான இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். மேலும் விவசாயத்திற்காக வங்கிகள் உள்பட பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் கடன் தொல்லையாலும், குடும்ப பிரச்சினையாலும் மனமுடைந்து காணப்பட்டார். மன அழுத்தம் காரணமாக அவர் யாருடனும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் நேற்று காலையில் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே வடக்கு காவிரி பாலம் வழியாக செல்லும் தண்டவாளம் ஓரம் நடந்து சென்று கொண்டிருந்தார். பின்னர் அவ்வழியாக வந்த ஒரு ரெயில்முன் பாய்ந்தார். இதில் ரெயில் மோதியதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story