சாத்தியக்கூறு அறிக்கை நிராகரிப்பு - டெல்லி-வாரணாசி புல்லட் ரெயில் திட்டத்துக்கு சிக்கல்


சாத்தியக்கூறு அறிக்கை நிராகரிப்பு - டெல்லி-வாரணாசி புல்லட் ரெயில் திட்டத்துக்கு சிக்கல்
x
தினத்தந்தி 22 Aug 2022 10:29 PM GMT (Updated: 22 Aug 2022 10:31 PM GMT)

டெல்லி-வாரணாசி புல்லட் ரெயில் திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லி-வாரணாசி இடையே அதிவேக புல்லட் ரெயில் இயக்குவதற்காக திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு எளிதாக இருக்கும் என்பதால், தேசிய நெடுஞ்சாலை-2 (என்.எச்.2) வழியே இந்த பாதையை உருவாக்குவதற்காக திட்டமிட்டு அதற்கான சாத்தியக்கூறு ஆராயப்பட்டது.

அதன்படி தேசிய அதிவேக ரெயில் கழகம் லிட். சார்பில் இந்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதில் மேற்படி பாதையில் ஏராளமான வளைவுகள் இருப்பது கண்டறியப்பட்டது.ஆனால் 350 கி.மீ. வேகத்தில் புல்லட் ரெயில் இயக்குவதற்கு வளைவான பாதை சாத்தியமில்லை என்பதால் மேற்படி அறிக்கையை ரெயில்வே வாரியம் நிராகரித்து உள்ளது.

ரெயில்வே வாரிய செயலாளர் ஆர்.என்.சிங் இந்த அறிக்கையை ஆய்வு செய்து மேற்படி முடிவை அறிவித்துள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.இதன் மூலம் டெல்லி-வாரணாசி புல்லட் ரெயில் திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.


Next Story