சாலை போட பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கு தீவைத்த பெண் நக்சலைட்டுகள்


சாலை போட பயன்படுத்தப்படும் எந்திரங்களுக்கு தீவைத்த பெண் நக்சலைட்டுகள்
x

தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்தனர். பெண் நக்சலைட்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலம் கங்கர் மாவட்டம் கம்டேடா கிராமத்தில் மத்திய அரசு திட்டத்தின்கீழ் சாலை போடும் பணி நடந்து வருகிறது.

இந்தநிலையில், சீருடை அணிந்த பெண் நக்சலைட்டுகள் சிலர், ஆயுதம் ஏந்தியபடி அங்கு வந்தனர். சாலை போடும் பணியை நிறுத்துமாறு மிரட்டினர். செல்போன்களை பறித்துக் கொண்டனர்.

சாலை போட பயன்படுத்தப்படும் 2 எர்த் மூவர் எந்திரங்கள், ஒரு கலவை எந்திரம் ஆகியவற்றுக்கு தீவைத்துவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. தகவல் அறிந்து போலீசார் அங்கு வந்தனர். பெண் நக்சலைட்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story