திரௌபதி, சீதாவை விட மிகச்சிறந்த பெண்ணியவாதிகள் யாருமில்லை - ஜேஎன்யூ பல்கலை. துணை வேந்தர்


திரௌபதி, சீதாவை விட மிகச்சிறந்த பெண்ணியவாதிகள் யாருமில்லை - ஜேஎன்யூ பல்கலை. துணை வேந்தர்
x

திரௌபதி, சீதாவை விட மிகச்சிறந்த பெண்ணியவாதிகள் யாருமில்லை என்று ஜேஎன்யூ பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்து மத இதிகாசங்களாக ராமாயணம் மற்றும் மகாபாரதம் உள்ளது. ராமாயணத்தில் இந்து மத கடவுள் ராமனின் மனைவியாக சீதா அறியப்படுகிறார். அதேபோல், மகாபாரத்தில் இடம்பெற்றுள்ள பஞ்சபாண்டவர்களின் மனைவியாக திரௌபதி அறியப்படுகிறார்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக துணை வேந்தர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், பெண்ணியம் மேற்கத்திய நாகரீகத்தை சேர்ந்ததல்ல. பெண்ணியம் இந்திய நாகரீகத்தை சேர்ந்தது. முதல் ஒற்றை தாயாக திரௌபதி (மகாபாரத கதாப்பாத்திரம்) மற்றும் சீதா (ராமாயனத்தில் இடம்பெற்றுள்ள இந்து மத கடவுள்) ஆகியோரை விட மிகச்சிறந்த பெண்ணியவாதிகள் யாருமில்லை.

நான் தென்மாநிலத்தில் இருந்து வந்துள்ளேன். நாங்கள் கண்ணகி மற்றும் மணிமேகலையை கொண்டுள்ளோம். நவீன இந்தியாவின் அறிவு சார் கதைகளை விரும்பும் மாணவ-மாணவிகள் கண்ணகி மற்றும் மணிமேகலையை கவனிக்க வேண்டும். நீங்கள் கொண்டாடும் இன்று அனைத்து பெண்களும் இதே நிலைக்கு வர ஒரு ஆணை விட 20 மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்' என்றார்.


Next Story