யு.பி.எஸ்.சி தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு - இந்திய அளவில் சுருதி சர்மா முதலிடம்


யு.பி.எஸ்.சி தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு - இந்திய அளவில் சுருதி  சர்மா முதலிடம்
x

இந்திய அளவில் முதல் மூன்று இடங்களையும் பெண்கள் பிடித்துள்ளனர்.

புதுடெல்லி,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான தேர்வுகள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் நடத்தப்படுகிறது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுகள் அதிகரித்து வந்த காரணத்தால் இந்த ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வு நடைபெறுமா என முதலில் கேள்வி எழுந்தது.

ஆனால் திட்டமிட்டபடி கடந்த ஜனவரி மாதம் யு.பி.எஸ்.சி எழுத்து தேர்வு நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து இந்த தேர்வில் வெற்றி பெற்று தகுதி செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

இந்த நிலையில் யு.பி.எஸ்.சி தேர்வு இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி தேர்வில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதில் இந்திய அளவில் முதல் மூன்று இடங்களையும் பெண்கள் பிடித்துள்ளனர். முதல் இடத்தை சுருதி சர்மாவும், 2-வது இடத்தை அங்கிதா அகர்வால் என்பவரும், 3-வது இடத்தை காமினி சிங்லா-வும் பிடித்துள்ளனர்.


Next Story