சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் நிதி அமைச்சர்: ப.சிதம்பரம் தாக்கு
பணவீக்கத்தை பற்றி நிர்மலா சீதாராமன் கவலைப்படவில்லை என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதகிமதாக உயர்ந்து இருக்கிறது என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்த் நிலையில், இதனை சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், "பணவீக்கம் என்னுடைய தலையாய கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது!
உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது." என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story