பொதுமக்களின் மனங்களை வெல்ல புதுப்புது வழிகளை கண்டுபிடியுங்கள்; தொண்டர்களுக்கு ஜே.பி. நட்டா அறிவுரை


பொதுமக்களின் மனங்களை வெல்ல புதுப்புது வழிகளை கண்டுபிடியுங்கள்; தொண்டர்களுக்கு ஜே.பி. நட்டா அறிவுரை
x

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டிபன் கூட்டம் நடத்தி, கட்சி தொண்டர்களுடன் ஒன்றாக அமர்ந்து இன்று சாப்பிட்டார்.

கவுதம புத்தா நகர்,

உத்தர பிரதேசத்தின் கவுதம புத்தா நகரில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டிபன் கூட்டம் ஒன்றை இன்று நடத்தினார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் பூபேந்திர சவுத்ரி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான மகேஷ் சர்மா மற்றும் பங்கஜ் சிங் மற்றும் கவுதம புத்தா நகரின் அனைத்து பா.ஜ.க. தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டம் 2 மணிநேரம் நடந்தது. அப்போது கட்சியினரிடம் பேசிய நட்டா, தொண்டர்கள் விவேகமுடன் நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களின் மனங்களை வெல்ல புதுப்புது வழிகளை கண்டுபிடியுங்கள் என அறிவுரை வழங்கினார்.

சுயஒழுக்கமுடன் இருக்க வேண்டியது நம் அனைவருக்கும் தேவையானது. ஆணவம் விடுத்து, உங்களுடைய பொறுப்பை உறுதிப்படுத்துங்கள். குறுகிய மனம் படைத்தவர்களாக இல்லாமல், நீங்கள் யாரென பிறரிடம் காட்டாமல், ஒவ்வொருவருடனும் ஒன்றுபட்டு இருங்கள் என அவர் கூறினார்.

அதிலும், சமூக பிரச்சனையின்போது யாரேனும் சிலர் அல்லது எதிர்க்கட்சிகள் உங்களை தாக்கி பேச முற்பட்டால் அல்லது கேள்வி எழுப்பினால், அமைதியான முறையில் அவற்றை கையாள முயற்சி செய்ய வேண்டும்.

பா.ஜ.க. எப்போதும் சமூகத்துடன் ஒன்றிணைந்து உள்ளது. சமூக நலனுக்காக கட்சி உழைக்கிறது. அதனால், யாரிடமும் ஆவேசத்துடன் செயல்பட வேண்டாம் என ஜே.பி. நட்டா கூறியுள்ளார். இந்த டிபன் கூட்டத்தின்போது, தொண்டர்களுடன் ஒன்றாக அமர்ந்து அவர் உணவு சாப்பிட்டார்.


Next Story