டெல்லியில் பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து - கயிறு கட்டி இறங்கியதால் உயிர்தப்பிய மாணவர்கள்


டெல்லியில் பயிற்சி மையத்தில் திடீர் தீ விபத்து - கயிறு கட்டி இறங்கியதால் உயிர்தப்பிய மாணவர்கள்
x

டெல்லி முகர்ஜி நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி முகர்ஜி நகர் பகுதியில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மதியம் 12.30 மணியளவில் கட்டிடத்தின் மேல்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து பயிற்சி மையத்தில் படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் பீதி அடைந்தனர். படிக்கட்டு வழியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாடியில் இருந்து கயிறு மூலம் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக கீழே இறங்கினர்.

இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர், 11 வாகனங்களில் சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்கள் ஜன்னல் வழியாக கீழே இறங்குவதற்கு உதவி செய்தனர். இந்த விபத்தில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக மாணவர்கள் வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

கட்டிடத்தின் மின்சார மீட்டரில் தீ விபத்து ஏற்பட்டதுடன், மின் உபகரணங்களில் இருந்து புகை வெளியேறியதால் மாணவர்கள் பீதியடைந்து, பயிற்சி மையத்தின் பின்புறம் வழியாக கயிறு கட்டி கீழே இறங்கத் தொடங்கியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story