மளிகைக்கடையில் தீவிபத்து; ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்


மளிகைக்கடையில் தீவிபத்து; ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
x

தார்வார் டவுனில் மளிகைக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.15 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.

உப்பள்ளி;

தார்வார் (மாவட்டம்) டவுன் சி.பி.டி. பகுதியில் மளிகைக்கடை ஒன்று உள்ளது. இந்த மளிகைக்கடை உரிமையாளர் நேற்றுமுன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மளிகைக்கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் கடை முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர், தார்வார் தீயணைப்பு படையினருக்கும், கடை உாிமையாளருக்கும் தகவல் தொிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கடையில் பற்றி எரிந்த தீயை, தண்ணீரை பய்ச்சி அடித்து அணைக்க முயன்றனர். அதன்படி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

ஆனாலும் தீவிபத்தில் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதன் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும். சம்பவம் அறித்து தார்வார் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

விசாரணையில், மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து தார்வார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story