ஆட்டோவில் ஏற்றி சென்ற சிலிண்டரில் 'தீ '


ஆட்டோவில் ஏற்றி சென்ற சிலிண்டரில் தீ
x

மல்லந்தூர் அருகே, ஆட்டோவில் ஏற்றி சென்ற சிலிண்டரில் திடீரென தீப்பிடித்தது.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு டவுன் மல்லந்தூர் ரோட்டில் உள்ள சிலிண்டர் குடோனில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றி கொண்டு வீடுகளுக்கு வினியோகிக்க ஊழியர் எடுத்துச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ஒரு சிலிண்டர் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே இதுகுறித்து ஆட்டோவில் இருந்தவரிடம் தெரிவித்தனர்.

உடனே அவர் ஆட்டோவை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் அவர் துரிதமாக செயல்பட்டு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த அந்த சிலிண்டரை மட்டும் சாலையில் தள்ளி விட்டார். மேலும், அவர் இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அந்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சிலிண்டரில் பிடித்து எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. துரிதமாக செயல்பட்ட ஊழியரை அப்பகுதியினர் பாராட்டினர்.


Related Tags :
Next Story