தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகத்தில் திடீர் தீ விபத்து
தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலக கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவி, அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்தை வருகிற 17-ம் தேதி அம்மாநில முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் திறந்து வைக்கத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story