இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்... 'ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள்' - பிரதமர் மோடி


இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையம்... ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள் - பிரதமர் மோடி
x

3டி தபால் நிலையத்தை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று திறந்து வைத்தார்.

பெங்களூரு,

பெங்களூருவின் கேம்பிரிட்ஜ் லே-அவுட் பகுதியில் 3டி தொழில்நுட்பத்தில் தபால் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது 3டி தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் தபால் நிலையம் ஆகும் .1100 சதுர அடி பரப்பளவில் இந்த தபால் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இந்த தபால் நிலையத்தை மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று திறந்து வைத்தார். கட்டிடத்தை திறந்து வைத்துப் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "இது பெருமை மிகு தருணம். 3டி தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை படைத்துள்ளது.என கூறினார்.

இந்த நிலையில் 3டி தபால் நிலையம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

பெங்களூருவில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் முதல் 3டி தபால் நிலையத்தைப் பார்ப்பதில் ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படுவார்கள். இது இந்தியாவின் புதுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டு. இது ஒரு தன்னம்பிக்கை இந்தியாவின் உணர்வையும் உள்ளடக்கியது. . இந்தக் கட்டுமானத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்" என தெரிவித்துள்ளார்.


Next Story