பெங்களூரு ராணுவ பள்ளியில் 6 சிறுமிகளுக்கு ஆயுத பயிற்சி


பெங்களூரு ராணுவ பள்ளியில் 6 சிறுமிகளுக்கு ஆயுத பயிற்சி
x

பெங்களூரு ராணுவ பள்ளியில் 6 சிறுமிகள் ராணுவ பயிற்சி பெற்று வருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு ஓசூர் ரோடு ஜான்சன் மார்க்கெட் பகுதியில் ராஷ்ட்ரிய ராணுவ பள்ளி உள்ளது. இந்த பள்ளி மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 1946-ம் ஆண்டு இந்த பள்ளி தொடங்கப்பட்டது. தற்போது அந்த பள்ளி தனது 75-வது ஆண்டு பவள விழாவை கொண்டாடி வருகிறது.

இத்தகைய பள்ளிகள் இந்தியாவில் மொத்தம் 5 இடங்களில் மட்டுமே உள்ளன. அதில் இதுவும் ஒன்றாகும். இந்த பள்ளியில் 6-ம் வகுப்பில் 6 சிறுமிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கு மாணவிகள் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவர்கள் சார்பில் இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன.

இந்திய பாதுகாப்பில் பங்களிப்பு

நிகழ்ச்சியின்போது அந்த மாணவிகள் தங்களின் வாழ்க்கை இலக்கு மற்றும் அதற்கு உந்துகோலாக இருந்த காரணி குறித்து பேசினர். அவர்கள் குஜராத், உத்தரபிரதேசம், ஆந்திரா, பஞ்சாப், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தால், அவர்கள் இந்த பள்ளியில் சேர்க்கை பெற்று இருப்பதாகவும், இந்திய பாதுகாப்பில் அவர்களது பங்களிப்பு வரும் காலங்களில் கட்டாயம் இருக்கும் எனவும் அவர்கள் கூறினர்.

அக்னிவீரர் பெண்கள் பிரிவில் ராணுவத்தில் சேருவதற்காக அவர்கள் ராணுவ ஆயுதங்களை கையாள்வது உள்ளிட்ட பயிற்சிகளை தற்போது இருந்தே படித்து வருகின்றனர். நேற்று மாணவிகளுக்கு, ராணுவ ஆயுதங்களை கையாள்வது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.


Next Story