கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமல்


கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமல்
x
தினத்தந்தி 8 Jun 2023 9:45 PM GMT (Updated: 8 Jun 2023 9:45 PM GMT)

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் 52 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும்.

திருவனந்தபுரம்,

கேரளாவில், மீன்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் 52 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த நாட்களில் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் கேரளாவில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதைதொடர்ந்து, நீண்ட கரை, தங்கசேரி, அழிக்கல் உட்பட மீன்பிடி துறைமுக பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலில் இருந்து கரை திரும்பினர். அவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தியுள்ளனர்.

இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் விசைப்படகுகளை பழுது பார்ப்பது, வலைகளை பின்னுவது மற்றும் மீன்பிடி உபகரணங்களை பராமரிக்கும் பணியில் ஈடுபடுவர். மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்ததையடுத்து மீனவர்களுக்கான இலவச ரேஷன் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. அதே நேரத்தில் மீனவர்களுக்கான நிவாரண நிதி தாமதமாக கிடைக்கும் என்பதால் மீனவர்கள் கவலையடைந்து உள்ளனர்.



Next Story