ராஜஸ்தான்: லாரி மீது கார் மோதி விபத்து.. குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு

முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது கார் பயங்கரமாக மோதியது.
ஜெய்ப்பூர்,
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீக். மருத்துவரான இவர் தனது மனைவி, மகள் மற்றும் சக பணியாளர்களுடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றார். சுற்றுலா முடிந்து அனைவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை கார் ராஜஸ்தானின் பிகானேர் மாவட்டத்தில் அமிர்தசரஸ்-ஜாம்நகர் பாரத்மாலா நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பிரதீக்கின் ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story