தெலங்கானா: கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி


தெலங்கானா: கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலி
x

தெலங்கானாவின் நாகர்குர்னூல் மாவட்டத்தில் கிரேன் கம்பி அறுந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

ஐதராபாத்

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ரெகுமானா கடா பகுதியில் பாலமுரு - ரங்காரெட்டி இடையே பாசன திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 100 அடி ஆழமுள்ள சுரங்கப்பாதையில் கிரேன் உதவியுடன் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தது. திடீரென கிரேன் கம்பி அறுந்து விழுந்தது இதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து கொல்லப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட் ரெட்டி கூறியதாவது:-

பாதிக்கப்பட்டவர்கள் 100 மீட்டர் ஆழத்தில் காயங்களுடன் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அவர்கள் உடனடியாக அங்குள்ள உஸ்மானியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். ஆனால் அவர்கள் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர்.மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.


Next Story