பொய் புகார் அளித்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


பொய் புகார் அளித்தவருக்கு  ரூ.25 ஆயிரம் அபராதம்
x

பொய் புகார் அளித்தவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு கெங்கேரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரவிக்குமார். அவர், வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பராமரிப்பு சம்பந்தப்பட்ட வரியை செலுத்தாததால், மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் துண்டித்தனர். இதுதொடர்பாக ரவிக்குமார், அதிகாரிகள் தன்னை சாதி பெயரை கூறி திட்டி தொல்லை கொடுப்பதாக அவர்கள் மீது பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோா்ட்டில் ரவிக்குமார் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் கெங்கேரி போலீசார் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது ரவிக்குமார் பொய் புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, ரவிக்குமாருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story