சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்கான நடை திறப்பு


சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்கான நடை திறப்பு
x

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜைக்கான நடை இன்று திறக்கப்பட்டது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு சீசளை தவிர ஒவ்வொரு மாதமும் மலையாள மாதத்திற்கு இணையான தமிழ் மாத பிறப்பையொட்டி முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும் இந்த ஆண்டுக்காண நிறைவுத்தரிசி பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்பட்டது.

நிறைவுத்தரிசி பூஜை நாளை காலை ஆறு மணிக்கு தொடங்குகிறது. இந்த விழாவில் அறுவடை செய்த நெற்கதிர்களை அய்யப்பனுக்கு படைத்து பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். அன்று இரவு சபரிமலை கோவில் நடை அடைக்கப்படும் நாள் முழுவதும் நெய்யபிஷேகம் அஸ்டாபிஷேகம் உஜபூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பக்தர்கள் பம்பை ஆறு, நீலி மலை வழி பாதையை பயன்படுத்த தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story