இமாசல பிரதேசம்: காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் மாநில பாஜக முன்னாள் தலைவர் கிமி ராம் சர்மா

இமாசல பிரதேசம்: காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் மாநில பாஜக முன்னாள் தலைவர் கிமி ராம் சர்மா
x

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.விற்கு வலுவான போட்டியாக கிமி ராம் சர்மா இருப்பார் என்று கூறப்படுகிறது.

புதுடெல்லி,

இமாசல பிரதேசம் மாநில பா.ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கிமி ராம் சர்மா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கிமி ராம் சர்மா இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 2017 சட்டசபை தேர்தலில் அவருக்கு சீட்டு வழங்காததால் அவர் மனமுடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா முன்னிலையில் அவர் காங்கிரஸில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் இணைப் பொறுப்பாளர் குர்கீரத் சிங், முன்னாள் அமைச்சரும், இமாசல பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவருமான சுதிர் சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள இமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.விற்கு வலுவான போட்டியாக கிமி ராம் சர்மா இருப்பார் என்று கூறப்படுகிறது.

Next Story