முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் காலமானார்


முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் கணவர் காலமானார்
x

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கணவர் தேவ்சிங் ஷெகாவத் காலமானார்.

புனே,

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கணவர் தேவ்சிங் ஷெகாவத் காலமானார். அவருக்கு வயது 89. மாரடைப்பு காரணமாக புனேவில் உள்ள மருத்துமனையில் சேர்க்கப்பட்ட தேவ்சிங் ஷெகாவத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். முன்னாள் ஜனாதிபதியின் கணவர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், " கணவர் மறைவால் வாடும் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் ஆற்றிய சேவை மூலம் சமூகத்தில் தனி முத்திரை பதித்தவர் ஷெகாவத்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story