பரிசுப்பொருட்கள் விழுந்ததாக கூறி மோசடி:


பரிசுப்பொருட்கள் விழுந்ததாக கூறி மோசடி:
x
தினத்தந்தி 18 Feb 2023 10:30 AM IST (Updated: 18 Feb 2023 10:33 AM IST)
t-max-icont-min-icon

பரிசுப்பொருட்கள் விழுந்ததாக கூறி மோசடி சம்பவத்தால் தொழில்அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெங்களூரு

பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியை சேர்ந்தவர் மகாதேவா. தொழில்அதிபர். இவரை செல்போன் மூலம் மர்நபர்கள் 2 பேர் தொடர்புகொண்டனர். அப்போது அவர்கள் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை சேர்ந்தவர்கள் என்றும், உங்களுக் குலுக்கல் முறையில் பரிசு விழுந்துள்ளதாகவும் கூறி உள்ளனர். அந்த பரிசை பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறினர். இதனை நம்பிய மகாதேவா, மர்மநபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக ரூ.15 லட்சம் வரை அனுப்பினார். இதையடுத்து மர்மநபர்கள் செல்போன் இணைப்பை துண்டித்தனர். ஆனால் அவருக்கு எந்த பரிசுப்பொருட்களும் வரைவில்லை. இதனால் மர்மநபர்கள் பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக கூறி ரூ.15 லட்சத்தை மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து பணத்தை இழந்த சோகத்தில் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எச்.ஏ.எல். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story