வங்கி அதிகாரியிடம் ரூ.5.70 லட்சம் மோசடி
உப்பள்ளியில் வங்கி அதிகாரியிடம் ரூ.5.70 லட்சம் மோசடி சம்பவம் நடந்துள்ளது.
உப்பள்ளி-
தார்வார் மாவட்டம் உப்பள்ளி கோகுல் ரோடை அடுத்த கல்லூர் ேல அவுட் பகுதியை சேர்ந்தவர் சிவமூர்த்தி. தனியார் வங்கியில் உயர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் இவரை செல்போனில் தொடர்பு கொண்டார்.அப்போது பிரபல வங்கியில் இருந்து பேசியதாக அந்த நபர் கூறினார். மேலும் சிவமூர்த்தியிடம் உங்கள் வங்கி கணக்கில் சில ஆவணங்களை இணைக்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதை சிவமூர்த்தி நம்பியதும், அவரிடம் இருந்து ஆதார் கார்டு உள்பட பல்வேறு விவரங்களை அந்த நபர் பெற்றார்.
இதையடுத்து சில மணி நேரங்களில் சிவமூர்த்தியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.5.70 லட்சம் எடுத்திருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவமூர்த்தி உடனே இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.