மாஜிஸ்திரேட்டு மீது செருப்பு வீசிய கைதி - மும்பை கோர்ட்டில் பரபரப்பு


மாஜிஸ்திரேட்டு மீது செருப்பு வீசிய கைதி - மும்பை கோர்ட்டில் பரபரப்பு
x

கோப்புப்படம்

குர்லா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீது கைதி செருப்பு வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மும்பை மான்கூர்டு பகுதியை சேர்ந்தவர் ஜாவித் சேக் என்ற பிரதீப் தாயடே (வயது 39). இவர் மீது அங்குள்ள என்.எம். ஜோஷி, டிராம்பே போலீசில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கடந்த சனிக்கிழமை ஜாவித் சேக், குர்லா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு வந்தார். அவர் சுமார் 1 மணி நேரம் காத்திருந்த போதும், வழக்கு விசாரணை தொடங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் திடீரென அவர் காலில் அணிந்து இருந்த செருப்பை கழற்றி மாஜிஸ்திரேட்டு மீது வீசி எறிந்தார். இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜாவித் சேக்கை கைது செய்தனர். தன் மீதான வழக்கின் விசாரணை நீண்டகாலமாக நடந்து வந்த ஆத்திரத்தில் மாஜிஸ்திரேட்டு மீது செருப்பு வீசியதாக ஜாவித் சேக் போலீசாரிடம் தெரிவித்தார்.


Next Story