நடுவானில் விமானம் மீது மோதிய பறவை - துபாய் புறப்பட்ட விமானம் டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்


நடுவானில் விமானம் மீது மோதிய பறவை - துபாய் புறப்பட்ட விமானம் டெல்லியில் அவசர அவசரமாக தரையிறக்கம்
x
தினத்தந்தி 1 April 2023 4:09 PM IST (Updated: 1 April 2023 4:28 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இருந்து பெட்எக்ஸ் விமானம் துபாய்க்கு புறப்பட்டது.

டெல்லி,

தலைநகர் டெல்லியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய்க்கு இன்று 'பெட்எக்ஸ்' சரக்கு விமானம் புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு 1,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென விமானம் மீது பறவைகள் மோதின. இதனால், அதிர்ச்சியடைந்த விமானி உடனடியாக விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் அவசர அவசமாக தரையிறக்கினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

தரையிறக்கத்திற்க்கு பின்னர் பறவை மோதியதால் விமானத்தின் இறக்கை, எஞ்சின் உள்ளிட்ட பகுதிகளில் ஏதேனும் பாதிப்பு அல்லது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

பாதிப்பு எதுவும் இல்லை என்பது உறுதியான பின்னர் விமானம் டெல்லியில் இருந்து மீண்டும் துபாய்க்கு புறப்பட்டது.

துபாய் புறப்பட்ட விமானம் மீது நடுவானில் பறவை மோதியதையடுத்து விமானம் உடனடியாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்பட்டது.


Next Story