டெல்லி ஜி20 உச்சி மாநாடு: லைவ் அப்டேட்ஸ்
உக்ரைனில் நீடித்த அமைதி நிலவ பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Live Updates
- 9 Sept 2023 12:55 PM IST
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், இந்திய பிரதமர் மோடியுடன் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். சவுதி அரேபியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. எரிசக்தித் துறையில் இரு நாடுகளும் வலுவான பார்ட்னர்ஷிப்பை கொண்டுள்ளன.
- 9 Sept 2023 12:53 PM IST
ஜி20 மாநாட்டின் முதல் நாளான இன்று பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் இந்திய பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
- 9 Sept 2023 11:38 AM IST
போரால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையையும் நம்மால் வெல்ல முடியும் - பிரதமர் மோடி
ஜி20 மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘உலகிற்கு புதிய பாதையை காட்டுவதில் 21ம் நூற்றாண்டு ஒரு முக்கிய காலமாகும். இந்த காலத்தில் தான் பழைய பிரச்சினைகள் நம்மிடமிருந்து புதிய தீர்வை எதிர்பார்க்கின்றன. அதனால் தான் மனிதத்தை மையப்படுத்திய அணுகுமுறையுடன் நாம் நமது பொறுப்புகளை நிறைவேற்றி முன்னேற வேண்டும். கொரோனாவை நம்மால் வெல்லமுடியும் என்றால் போரால் ஏற்பட்ட நம்பிக்கையின்மையையும் நம்மால் வெல்ல முடியும்’ என்றார்.
- 9 Sept 2023 11:24 AM IST
மொராக்கோவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார் - பிரதமர் மோடி
ஜி20 உச்சிமாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி துவக்க உரையாற்றினார். அவர் கூறுகையில், ஜி20 உச்சிமாநாட்டை நாம் தொடங்குவதற்கு முன் மொராக்கோ நாட்டில் நடந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நான் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மொராக்கோவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது’ என்றார்.
மொராக்கோ நாட்டில் இன்று நடந்த நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 9 Sept 2023 11:07 AM IST
ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்க ஒன்றியம் நிரந்தர உறுப்பினராக இணைந்துள்ளது. இதன்மூலம் ஜி20 அமைப்பு இனி ஜி21 அமைப்பாக மாறுகிறது.
- 9 Sept 2023 11:03 AM IST
நாட்டின் பெயர் பலகையில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’
ஜி20 உச்சிமாநாடு தொடங்கிய நிலையில் ஒவ்வொரு நாட்டின் தலைவர்கள் முன்பும் நாட்டின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி இருக்கை முன் வைக்கப்பட்டுள்ள நாட்டின் பெயர் பலகையில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்ற குறிப்பிடப்பட்டுள்ளது...!
- 9 Sept 2023 10:55 AM IST
உலக நாடுகளின் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி...!
ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த அர்ஜெண்டினா அதிபர் அல்பர்டோ பெர்னாண்டஸ், கனடா பிரதமர் ஜெஸ்டின் டிரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அண்டனி அல்பெனிஸ், ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவி உர்சுலா வென் வெ லியன், ஐரோப்பிய கவுன்சில் அமைப்பின் தலைவர் சார்லஸ் மைகில், ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கால்ஸ், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலொனி ஆகியோரை பிரதமர் மோடி வரவேற்றார்.
இதை தொடர்ந்து ஜப்பான் பிரதமர் பிமுஷி கிஷிடா, தென்கொரிய அதிபர் யோன் சுக் யெலோ, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமப்சொ, துருக்கி அதிபர் எர்டோகன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சர்ஜி லவ்ரோ, இந்தோனேசிய அதிபர் ஜொகொ விடோடோ, பிரேசில் அதிபர் லிசி இனசியோ, சீன பிரதமர் லி குவான், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரையும் பிரதமர் மோடி வரவேற்றார்.
- 9 Sept 2023 10:43 AM IST
நைஜீரிய அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி...!
ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த நைஜீரிய அதிபர் பொலா அகமது தினுபுவை பிரதமர் மோடி வரவேற்றார்.
- 9 Sept 2023 10:41 AM IST
நெதர்லாந்து பிரதமரை வரவேற்றார் பிரதமர் மோடி...!
ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூடியை பிரதமர் மோடி வரவேற்றார்.
- 9 Sept 2023 10:35 AM IST
ஐக்கிய அரபு அமீரக அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி...!
ஜி20 மாநாட்டில் பங்கேற்க பாரத் மண்டபம் வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயத் அல் நஹ்யனை பிரதமர் மோடி வரவேற்றார்.





















