இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 06-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 6 Dec 2025 12:53 PM IST
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மூன்றாம் மொழியை கட்டாயமாக்குவதா? - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்ற சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
- 6 Dec 2025 11:44 AM IST
சமாதானம்தான் இறைக்கொள்கை; சனாதானம் அல்ல - அமைச்சர் சேகர்பாபு
பக்தியை வைத்து பகை வளர்க்கக்கூடாது. சமாதானம் என்பதுதான் இறைக்கொள்கை, சனாதனம் அல்ல. வடக்கே இது போன்ற விரும்பத்தகாத சூழல்களை ஏற்படுத்தி, அரசியல் மாற்றத்தை உருவாக்கியதை போல், தமிழகத்திலும் உருவாக்கலாம் என்று நினைக்கிறார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
- 6 Dec 2025 11:43 AM IST
விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது - செல்வப்பெருந்தகை
த.வெ.க. தலைவர் விஜய்யை, பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்தது குறித்து தெரியாது. திமுகவோடு காங்கிரஸ் ஐவர் குழு பேச்சு நடத்துவதுதான் எங்களுக்கு தெரியும். விஜய்யுடன் பேசுங்கள் என்று அகில இந்திய தலைமை எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. விஜய்யை சந்திக்க பிரவீன் சக்கரவத்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை. பேசவும் சொல்லவில்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
- 6 Dec 2025 10:49 AM IST
ஆவணப்படமாகும் அஜித்தின் கார் ரேஸ் பயணம் - ஏ.எல்.விஜய் இயக்குகிறாரா?
அஜித்குமார், தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்துகொண்டிருக்கிறார். இதற்கிடையில் அஜித்தின் கார் ரேஸ் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது. இந்த ஆவணப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- 6 Dec 2025 10:26 AM IST
செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.
- 6 Dec 2025 10:25 AM IST
இண்டிகோ விமான சேவை ரத்து: தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் வசதிக்காக தொலைதூர ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
- 6 Dec 2025 10:23 AM IST
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஏலவார்க்குழலி அம்மன் கோவிலுக்கு ஏகாம்பரநாதர் இறை பணி அறக்கட்டளை சார்பில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கத் தேர் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. இதன் வெள்ளோட்டம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி ஓரிக்கை மகா பெரியவர் மணி மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தங்கத்தேருக்கு நேற்று சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு தங்கத்தேர் வெள்ளோட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
- 6 Dec 2025 10:21 AM IST
அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.
அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
















