மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் நடித்த கந்ததகுடி ஆவணப்படம் 3 நாளில் ரூ.20 கோடி வசூலித்து சாதனை
மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் நடித்த கந்ததகுடி ஆவணப்படம் 3 நாளில் ரூ.20 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
பெங்களூரு:
ரசிகர்களால் பவர் ஸ்டார் என அழைக்கப்பட்ட கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் கடைசியாக நடித்த கந்ததகுடி என்ற ஆவணப்படம் கடந்த 28-ந் தேதி வெளியாகி இருந்தது. இந்த நிலையில் 28, 29, 30 ஆகிய 3 நாட்களில் கந்ததகுடி ஆவணப்படம் ரூ.20 கோடி வசூலித்து உள்ளது. வழக்கமாக புனித் ராஜ்குமார் படத்தில் சண்டை, காதல், குடும்ப காட்சிகள் இடம் பெற்று இருக்கும். ஆனால் கந்ததகுடி திரைப்படம் முழுக்க முழுக்க வனவிலங்குகள் பற்றியும், இயற்கை பற்றியும் எடுக்கப்பட்ட படமாகும். ஆனாலும் இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. இதற்கு காரணம் புனித் ராஜ்குமார் இறுதியாக நடித்த படம் என்பது தான். இனி புனித் ராஜ்குமாரை பார்க்க முடியாது என்று கருதும் ரசிகர்கள் அவரை கடைசியாக ஒரு முறை திரையரங்குகளில் பார்த்து விட வேண்டும் என்று கந்ததகுடி ஆவணப்படத்தை பார்த்து வருகின்றனர்.