சட்டத்துக்கு அப்பாற்பட்டது அல்ல, சோனியாகாந்தி குடும்பம் - பா.ஜனதா கருத்து


சட்டத்துக்கு அப்பாற்பட்டது அல்ல, சோனியாகாந்தி குடும்பம் - பா.ஜனதா கருத்து
x

சோனியாகாந்தி குடும்பமோ, அவர்கள் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களோ சட்டத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல என பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ராஜீவ்காந்தி அறக்கட்டளைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது குறித்து பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:- அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, மோடி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதை வரவேற்கிறோம். இம்முடிவு, சோனியாகாந்தி குடும்பத்தின் ஊழலை அம்பலப்படுத்தி இருக்கிறது.

சோனியாகாந்தி குடும்பமோ, அவர்கள் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களோ சட்டத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல.

காங்கிரஸ் ஆட்சியின்போது, சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக், சீன தூதரகம், சீன அரசு மற்றும் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் உள்ளிட்ட ஊழல்வாதிகளிடம் இருந்து ராஜீவ்காந்தி பவுண்டேசன் நன்கொடை பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில், ஜாகிர் நாயக் நாட்டை விட்டு தப்பி ஓடினார்.

டோக்லாம் பகுதியில் சீன ராணுவத்துக்கு எதிராக இந்திய படைகள் மோதியபோது, ராகுல்காந்தி சீன தூதரை சந்தித்து கொண்டிருந்தார்.

அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்டு, காங்கிரஸ் அரசை சோனியாகாந்தியே நடத்தினார். எந்த பதவியும் இல்லாமல், அவரது குடும்பம் அதிகார பலன்களை ருசித்தது. ஊழல் இருக்கும் இடத்தில் எல்லாம் சோனியாகாந்தி குடும்பம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story