சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவை நவீன இந்தியாவின் அடித்தளம் - பிரதமர் மோடி


சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவை நவீன இந்தியாவின் அடித்தளம் - பிரதமர் மோடி
x

இந்திய அரசியலமைப்பில் உள்ள சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவை நவீன இந்தியாவின் அடித்தளம் என பிரதமர் மோடி கூறினார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் பிஹு பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று கவுகாத்தி சென்றுள்ளார். கவுகாத்தியில் எய்ம்ஸ் மருத்துவமனையை அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் பிரதமர் திறந்து வைத்தார். எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,123 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு 2017ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில், இன்று திறந்து வைத்தார்.

இதன்பின் அசாம் மாநிலம் கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் 75-ஆம் ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, நமது நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் கவுகாத்தி உயர் நீதிமன்றம் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது ஒரு தனித்துவமான உயர் நீதிமன்றமாகும்.

இது அதிக அதிகார வரம்பைக் கொண்டுள்ளது. அசாம் தவிர மற்ற மாநிலங்களை இந்த உயர்நீதிமன்றம் கட்டுப்படுத்துகிறது. இந்திய அரசியலமைப்பில் உள்ள சமத்துவம், நல்லிணக்கம் ஆகியவை நவீன இந்தியாவின் அடித்தளம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story