ராஜஸ்தான்:வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறார்- முதல்-மந்திரி அசோக் கெலாட்


ராஜஸ்தான்:வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறார்- முதல்-மந்திரி அசோக் கெலாட்
x

ராஜஸ்தானில் தொடர் கனமழை, வெள்ளத்தால் பல மாவட்டங்கள் மூழ்கியுள்ளன.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை, வெள்ளத்தால் பல மாவட்டங்கள் மூழ்கியுள்ளன. குறிப்பாக ஜலாவர், தோல்பூர், பாரன்,கரௌலி ஆகிய மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கரௌலி மாவட்டத்தில் வான்வழியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதன்பின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்-மந்திரி அசோக் கெலாட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட பிறகு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வார் என்றும் மந்த்ராயலில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க உள்ளார் என செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தோல்பூர், பூண்டி, கோட்டா மற்றும் பாரன் ஆகிய மாவட்டங்களில் நேற்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story