ஜிப்மரில் மாத்திரை, மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு? - அவதியுறும் நோயாளிகள்


ஜிப்மரில் மாத்திரை, மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு? - அவதியுறும் நோயாளிகள்
x

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உட்புற மற்றுக் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள . மருந்துகள் தட்டுப்பாட்டால், மாத்திரைகளை வெளியில் வாங்கிக் கொள்ளுமாறு நோயாளிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால், மருத்துவமனையில் போதுமான மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story