காதல் கணவர் தன்னை கவனிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் கணவர் தன்னை கவனிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதல் கணவர் தன்னை கவனிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

துமகூரு:

காதல் திருமணம்

துமகூரு மாவட்டம் குப்பி பகுதியை சேர்ந்தவர் மவுனிக்கா (வயது 21). இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.சி.ஏ. படித்து வந்தார். இதற்கிடையே அவருக்கும் துமகூருவை சேர்ந்த ஆபிரகாம் என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், ஆபிரகாம் தனது நண்பர்களுடன் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார். இதனால் அவர் தனது மனைவியுடன் நேரத்தை செலவிடாமல் செப் அவரர சரியபக கவனிக்காமலும் இருந்துள்ளார்.

இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மவுனிக்கா மனமுடைந்து காணப்பட்டார். மவுனிக்கா, தனது பெற்றோரிடம் கணவர் குறித்து புகார் கூறி உள்ளார். அப்போது அவரது தாயும், மவுனிக்காவை திட்டியதாக தெரிகிறது.

தற்கொலை

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தம்பதி இடையே மீண்டும் இதுகுறித்து தகராறு உண்டானது. அப்போது நண்பர்களுடன் வெளியே சென்றால், தற்கொலை செய்து கொள்வதாக கூறி உள்ளார். ஆனால் ஆபிரகாம் அதை கண்டு கொள்ளாமல் வெளியே சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த மவுனிக்கா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காதல் கணவர், தன்னை சரியாக கவனிக்காமல் நண்பர்களுடன் சுற்றியதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.


Next Story