மின்சாரம் தாக்கி சிறுமி சாவு

மின்சாரம் தாக்கி சிறுமி பலியானார்.
பெலகாவி: பெலகாவி மாவட்டம் காந்திங்லாஜ் தாலுகா தோனவாடி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷ்கா (வயது 9) என்ற சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். சம்பவத்தன்று சிறுமி பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்றாள். பள்ளி வளாகத்தில் இருந்த செல்போன் இணைப்பு மின்கம்பத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனை அறியாமல் அந்த சிறுமி மின்வயரை மிதித்ததாக தெரிகிறது.
இதில் மின்சாரம் தாக்கி அவள் சம்பவ இடத்திலேயே பலியானாள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சடல்கா போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, அங்கிருந்து சிறுமியின் உடலை எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story