சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமி கற்பழிப்பு வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் புறநகரை சேர்ந்தவர் சந்திரப்பா (வயது 35). இவரது வீட்டுக்கு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதி பக்கத்து வீட்டு சிறுமி டி.வி.பார்க்க சென்றிருந்தார். அப்போது அந்த சிறுமியை சந்திரப்பா கற்பழித்திருந்தார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இந்த கற்பழிப்பு தொடர்பான வழக்கு விசாரணை கதக் மாவட்ட கோாட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். சிறுமியை சந்திரப்பா கற்பழித்திருப்பது நிரூபணமாகி உள்ளதால், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story