காதலி - மாமியார் நிர்வாண படங்களை ஆன்லைனில் வெளியிட்ட சென்னை டாக்டர் கொலை


காதலி - மாமியார்  நிர்வாண படங்களை ஆன்லைனில் வெளியிட்ட சென்னை டாக்டர் கொலை
x

காதலித்து 'லிவ் இன்' உறவுமுறையில் இருந்த வந்த நிலையில் காதலனை நண்பர்கள் மூலம் தீர்த்துக்கட்டிய காதலியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு

சென்னையை சேர்ந்தவர் விகாஷ். இவர், உக்ரைன் நாட்டுக்கு சென்று டாக்டருக்கு படித்திருந்தார். சென்னையில் டாக்டராக அவர் பணியாற்றினார்.

பெங்களூருவுக்கு மருத்துவ ஆராய்ச்சி படிப்புக்காக விகாஷ் வந்திருந்தார். இதற்கிடையில், கடந்த 9-ந் தேதி பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மைகோ லே-அவுட் 17-வது கிராசில் உள்ள காதலி வீட்டில் கோமா நிலையில் இருந்த விகாஷ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விகாஷ் இறந்து விட்டார்.

இதுகுறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விகாசை, அவரது காதலி மற்றும் நண்பர்கள் தான் கொலை செய்திருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், விகாசை கொலை செய்ததாக மைகோ லே-அவுட்டை சேர்ந்த பிரதிஷா, அவருடைய நண்பர்களான சுசீல், கவுதம் ஆகிய 3 பேரையும் பேகூர் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளதாவது:-

விசாசுக்கு டேட்டிங் ஆப் மூலம் பிரதீபா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக வளர்ந்துள்ளது. இருவரும் ஒருவரையொருவர் நன்கு பேசி புரிந்துகொண்டு பெங்களூரின் பேகுர் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து 'லிவ் இன்' முறையில் வாழ்ந்து வந்துள்ளனர். இது குறித்து அவர்கள் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.

தொடக்கத்தில் அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் அவர்கள் திருமனத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். நீண்ட நாள் கனவு ஒருவழியாக நிறைவேறியதையடுத்து இருவரும் மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். ஆனால் இப்போதுதான் சில உண்மைகள் தெரியவந்துள்ளது. அதாவது தான் தனது காதலனுடன் நெருக்கமாக இருப்பதை புகைப்படமாக காதலன் விகாஸ் எடுத்து வைத்துள்ளது காதலி பிரதீபாவுக்கு தெரியவந்துள்ளது. மட்டுமல்லாது காதலியை நிர்வாணமாக புகைப்படமும் எடுத்து வைத்திருக்கிறார் விகாஸ்

ஒருபுறம் இரு வீட்டார் புறத்திலிருந்து திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு மகிழ்ச்சியிலிருந்த பிரதீபாவுக்கு இந்த உண்மைகள் மறுபுறத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது இத்துடன் நிற்கவில்லை. திருமணம் தொடர்பாக பேசுவதற்காக வீட்டிற்கு வந்திருந்த பிரதீபாவின் அம்மாவையும் விகாஸ் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் காதலி பிரதீபா மனமுடைந்து என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்துள்ளார்.

இவையெல்லாமும் பிரதீபாவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய நிலையில், அவர் சற்றும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்துள்ளது. அதாவது இந்த படங்கள் போலியான கணக்கு மூலம் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதுதான் அது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரதீபா தனது காதலன் விகாசுடன் சண்டையிட்டுள்ளார். இதனையடுத்து இருவரும் தனியே பிரிந்து சென்றுள்ளனர். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதையும் தவிர்த்துள்ளனர்.

பின்னர் கடந்த 10ம் தேதி இந்த சம்பவம் குறித்து பேச வேண்டும் என்று, பிரதீபா விகாஸை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன் பின்னர் விகாஸ் கால் இடறி மாடியிலிருந்து தவறி விழுந்ததகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போதிலிருந்து நேற்றுவரை சிகிச்சை பெற்றிருந்த விகாஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். அவரது உயிரிழப்பு தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது கடந்த 10ம் தேதி தனது வீட்டுக்கு விகாஸை அழைத்த பிரதீபா, தனது நண்பர்களுடன் சேர்ந்து விகாஸை தாக்கியுள்ளார். இதில் விகாஸ் படுகாயமடையவே அவரை பிரதீபா மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது விகாஸ் உயிரிழந்த நிலையில், தற்போது பிரதீபா மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Next Story