பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.67 லட்சம் தங்கம் சிக்கியது


பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.67 லட்சம் தங்கம் சிக்கியது
x

பெங்களூரு விமான நிலைய கழிவறையில் கிடந்த ரூ.67 லட்சம் மதிப்பிலான தங்கம் சிக்கியது.

தேவனஹள்ளி:-

பெங்களூரு புறநகர் தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் வழியாக வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி தங்கம் உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்த விமானம் மூலம் தங்கம் கடத்தல் நடப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளிடம் இருந்து தங்கம் எதுவும் சிக்கவில்லை.

இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்த கழிவறையில் 2 பைகள் கிடந்தன. அந்த பைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பையில் இருந்த 1½ கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆனால் அதை கடத்தியவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதிகாரிகள் சோதனைக்கு பயந்து மர்மநபர்கள் தங்கத்தை கழிவறையில் போட்டு சென்றிருக்கலாம் என சந்தேகித்தனர். கடத்தல் தங்கத்தின் மதிப்பு ரூ.67 லட்சம் இருக்கும் என அதிகாரிகள் கூறினார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story