கீதா சிவராஜ்குமார் எடுத்தது நல்ல முடிவு


கீதா சிவராஜ்குமார் எடுத்தது நல்ல முடிவு
x

கீதா சிவராஜ்குமார் எடுத்தது நல்ல முடிவு என்று நடிகர் சுதீப் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கிச்சா சுதீப் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இவர் நேற்று உப்பள்ளியில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக நடிகர் சுதீப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமீபத்தில் நடிகை ரம்யா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சுதீப் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார். ரம்யா காங்கிரசை சேர்ந்தவர். இருப்பினும் எங்கள் நட்பில் எந்த வேறுபாடும் இல்லை. அவர் எனக்கு நல்ல தோழி. ரம்யா என்னை எப்போதும் அரசியலுக்கு வர ஊக்குவிப்பவர். அதனால் அவர் அரசியலுக்கு வர கூறியிருக்கலாம். காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள கீதா சிவராஜ்குமாருக்கு எனக்கு வாழ்த்துக்கள். கீதா அக்காள் எடுத்த முடிவின் பின்னால் நல்ல சிந்தனை இருக்கிறது.

சினிமாவுக்கும், அரசியல் பிரசாரத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டு துறையிலும் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறோம். மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க கூறுகிறார்கள். நான் இப்போது அரசியல் பற்றி பேச மாட்டேன். படத்தின் படப்பிடிப்பு பணிகள் உள்ளன. நான் வீட்டில் இருக்கும் போது எனக்கு சினிமா துறை பற்றிய தகவல்கள் கிடைக்கும். நான் இப்போது பிரசாரத்திற்கு செல்வதால், மக்கள் மனதில் என்ன இருக்கிறதை அறிந்து வருகிறேன். சாலையில் இறங்கினால் தான் நமது தகுதி தெரியும். நாம் மக்களிடம் பெறும் அன்பிற்கு இணை ஏதும் இல்லை. கட்சி வெற்றி பெற்றால், மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

இவ்வாறு நடிகர் சுதீப் கூறினார்.


Next Story