ஆந்திராவின் விஜயநகரத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது

கோப்புப்படம்
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
விஜயநகரம்,
ஆந்திர மாநிலம் விஜயநகரம் ரெயில் நிலையத்தில் புதன்கிழமை காலை சரக்கு ரெயில் ஒன்று லூப் டிராக்கில் இருந்து மெயின் டிராக்கிற்கு செல்லும் போது தடம் புரண்டது. இதையடுத்து அங்கு மீட்புப்பணிகள் நடைபெற்றது
இதனால் ரெயில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சீரமைப்புப் பணிகள் விரைவில் முடிக்கப்படும், என்றும் தெரிவித்தனர்.
ஆந்திராவில் கடந்த ஒரு வாரத்தில் இது இரண்டாவது சம்பவமாம். கடந்த புதன்கிழமை, தடி மற்றும் அனகப்பள்ளி இடையே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரெயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன.
Related Tags :
Next Story






