டெல்லி - மும்பை இடையே மின்சார நெடுஞ்சாலை அமைக்க திட்டம் - நிதின் கட்கரி தகவல்


டெல்லி - மும்பை இடையே மின்சார நெடுஞ்சாலை அமைக்க திட்டம் - நிதின் கட்கரி தகவல்
x
தினத்தந்தி 12 July 2022 12:19 AM IST (Updated: 12 July 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இருந்து மும்பைக்கு மின்சார நெடுஞ்சாலை அமைக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் மின்சார நெடுஞ்சாலை அமைக்க திட்டமிட்டிருப்பதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஹைட்ராலிக் டிரெய்லர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிதின் கட்கரி பேசியதாவது:-

டெல்லியில் இருந்து மும்பைக்கு மின்சார நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் மின்சார பஸ் மட்டுமில்லாமல், மின்சார லாரிகளையும் இயக்கலாம். இதற்காக சுமார் 2.5 லட்சம் கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. என்றார்.

மேலும், இந்தியாவின் அனைத்து மாவட்டங்களையும் நான்கு வழிச்சாலைகள் மூலம் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் வாகனங்கள் மூலம் ஏற்படும் மாசு பெரிதும் கலவை கொள்ள வைக்கிறது. எத்தனால், மெத்தனால் மற்றும் பச்சை ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிசக்திகளை பயன்படுத்த வேண்டும் என லாரி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நடைபெறும் ஊழலால் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும். நாட்டில் சாலை விபத்துகள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதே அரசின் நோக்கமாகும்.

அமெரிக்கா,சீனா, மற்றும் ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் போக்குவரத்து செலவுகள் அதிகமாக உள்ளது." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story