துணிக்கடை உரிமையாளரிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது


துணிக்கடை உரிமையாளரிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:45 PM GMT)

துணிக்கடை உரிமையாளரிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது லோக் அயுக்தா போலீசார் கைதுசெய்துள்ளனர்.

பாகேபள்ளி,

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் பாகேபள்ளி டவுனில் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் நாகேஷ் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பாகேபள்ளி டவுனில் துணிக்கடை வைத்திருக்கும் சந்திரசேகர் என்பவர், மற்றொரு துணிக்கடை அமைக்க அனுமதி கோரி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நாகேஷ், ரூ.4,500 லஞ்சம் கொடுத்தால் தான் அனுமதி வழங்கப்படும் என்றார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரசேகர், இதுபற்றி லோக் அயுக்தா போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் கொடுத்த அறிவுரையின்பேரில் சந்திரசேகர், நாகேசை சந்தித்து ரசாயன பொடி தடவிய ரூ.4,500-ஐ கொடுத்தார். அந்த பணத்தை நாகேஷ் வாங்கினார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த லோக் அயுக்தா போலீசார் நாகேசை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story