கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Nov 2022 3:02 AM IST (Updated: 28 Nov 2022 3:02 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

கோலார் தங்கவயல்:-

கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். 15 நாட்களுக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்திற்கு சில ஆதரவு தெரிவித்தனர். சிலர் ஆதரவு அளிக்கவில்லை. இதனால் அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் பிசுபிசுத்துபோனது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அனைவரும் வேலைக்கு திரும்பினர். அரசு தரப்பில் இவர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கோலார் மாவட்டத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் , மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்க கோரி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கோலார் பஸ் நிலையத்தில் திரண்ட அவர்கள் பின்னர் அங்கிருந்து பேரணியாக சென்று கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினர். இதை அறிந்த மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாநில அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதை கேட்ட போராட்டகாரர்கள் தங்கள் கோரிக்கை மனுவை அவரிடம் வழங்கிவிட்டு அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story