மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல்
மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. முதல் கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பூசி இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளலாம். இரண்டு சொட்டுக்கள் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும். சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரசால் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தான் மூக்கு வழியாக செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.