கங்கை நதியின் தூய்மை மேம்பட்டுள்ளதா? மீன்கள், டால்பின்களின் வாழ்வியல் சுழற்சி குறித்து ஆராய முடிவு...!


கங்கை நதியின் தூய்மை மேம்பட்டுள்ளதா? மீன்கள், டால்பின்களின் வாழ்வியல் சுழற்சி குறித்து ஆராய முடிவு...!
x

கங்கை நதியின் தூய்மை மேம்பட்டுள்ளதா? என்பது குறித்து கண்டறிய அந்நதியில் வாழும் மீன்கள், டால்பின்களின் வாழ்வியல் சுழற்சி குறித்து ஆராய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

இமயமலையில் தோன்றி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடும் இந்தியாவின் ஜீவநதி கங்கை. 2 ஆயிரத்து 525 கிலோமீட்டர் நீளம் கொண்ட கங்கா நதி வங்காளதேசத்தில் வழியாக பாய்ந்து இறுதியில் வங்க கடலில் கலக்கிறது.

இதற்கிடையில், கங்கை நதி மிகவும் மாசடைந்து வருவதால் அதை தூய்மைபடுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக, கங்கை தூய்மைபடுத்துவதற்கான தேசிய பணி என்ற துறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த துறையின் பிரதான நோக்கம் கங்கை நதியை தூய்மைபடுத்துவதாகும். 2014-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கங்கை நதியை தூய்மைபடுத்தும் பணிகள் தொடந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கங்கை நதியின் தூய்மை மேம்பட்டுள்ளதா? என்பது குறித்து மத்திய அரசால் அமைக்கபட்ட கங்கை தூய்மைபடுத்துவதற்கான தேசிய பணி துறை ஆய்வு மேற்கொள்ள உள்ளது. கங்கையை தூய்மைபடுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் பலன் கிடைத்துள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, கங்கை நதியின் தரம் மற்றும் நதியில் வாழும் டால்பின்கள், ஹில்சா ரக மீன்களின் வாழ்வியல் சுழற்சி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கங்கையில் வாழும் டால்பின்கள், ஹில்சா மீன்கள் எண்ணிக்கை மற்றும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த ஆய்வுகளின்போது கிடைக்கப்படும் தரவுகளின் அடிப்படையில் கங்கை நதியின் தூய்மை தன்மை குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story