புனே சொகுசு கார் விபத்து வழக்கு: சிறுவனின் தாத்தா கைது


புனே சொகுசு கார் விபத்து வழக்கு:  சிறுவனின் தாத்தா கைது
x

விபத்துக்குள்ளான காரை ஓட்டியதாக ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தியதாக குடும்ப டிரைவர் கூறியதன் அடிப்படையில், சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார்.

புனே,

மராட்டிய மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் (Porsche) மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன. ஆனால் உறவினர்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் அதிகாரிகள் இருவர் கடமை தவறியதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப கார் டிரைவரை இந்த வழக்கில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் தாத்தா மீது கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story