தலைக்கு மேலே பளு தூக்கிய மூதாட்டி; வைரலான வீடியோ


தலைக்கு மேலே பளு தூக்கிய மூதாட்டி; வைரலான வீடியோ
x
தினத்தந்தி 21 May 2022 3:39 PM IST (Updated: 21 May 2022 3:44 PM IST)
t-max-icont-min-icon

மூதாட்டி ஒருவர் அதிக எடை கொண்ட பளுவை தலைக்கு மேலே தூக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

புதுடெல்லி,

இளம் வயதினர் விளையாட்டில் ஆர்வமுடன் இருப்பது உண்டு. இவற்றில் பளு தூக்குதல் என்பது உடலுக்கு வலு சேர்க்கும். ஆனால், இவற்றில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் தரையில் இருந்து உயரே தூக்க கூடிய டெட்லிப்ட் எனப்படும் பளு தூக்குதலை செய்வதற்கு உடலில் வலிமை வேண்டும்.

அதனை கீழிருந்து நெஞ்சுக்கு நேராக கொண்டு வந்து பின்னர் தலைக்கு மேலே கொண்டு செல்வது என்பதற்கு சரியான பயிற்சியும் இருக்க வேண்டும். இந்த நிலையில், வீடியோ ஒன்றில் மூதாட்டி ஒருவர் பளு தூக்குதலில் ஈடுபடுகிறார். அவர் தலைக்கு மேலே அதனை தூக்கியபடி சிறிது நேரம் நிற்கிறார்.

அதன்பின்னர் அதனை கீழே கொண்டு வருகிறார். ஒரு சில வினாடிகளே ஓடும் இந்த வீடியோவில் மூதாட்டியின் வலிமையை பார்த்து அவரது பேரன் அதிர்ச்சி அடைகிறார். இன்றைய இளைஞர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் பளுவை தூக்கி மூதாட்டி மேற்கொண்ட இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story