மாப்பிள்ளை 36 இன்ச்... பொண்ணு 31 இன்ச்... ஸ்மார்ட் ஜோடிக்கு டும்... டும்.. - வைரலாகும் கல்யாண வீடியோ....!


மாப்பிள்ளை 36 இன்ச்... பொண்ணு 31 இன்ச்... ஸ்மார்ட் ஜோடிக்கு டும்... டும்.. - வைரலாகும் கல்யாண வீடியோ....!
x

மராட்டியத்தில் 36 அங்குலம் உயரம் உள்ள மணமகன், 31 அங்குலம் உயரம் உள்ள மணமகளை திருமணம் செய்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் ஜல்கான் நகரில் சந்தீப் மற்றும் உஜ்வாலா என்ற இரண்டு பேர் உயரம் குறைவாக இருந்துள்ளனர். இதில் சந்தீப் உயரம் 36 அங்குலம், உஜ்வாலா உயரம் 31 அங்குலம் ஆகும். உயரம் குறைவாக சந்தீப் மற்றும் உஜ்வாலா ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாகவும் இவர்களது காதலுக்கு பெற்றோர் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெற்றோர்களின் சம்மந்தத்துடன் சந்தீப் மற்றும் உஜ்வாலா தம்பதியினர் நேற்று திருமணம் செய்துகொண்டனர். ஜல்கான் நகரில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் இரு வீட்டாரின் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

உயரம் குறைவான இந்த ஸ்மார்ட் ஜோடியின் திருமணத்தை மண்டபத்தில் இருந்தவர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் விடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. மேலும் இணையத்தில் இந்த ஜோடிக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




Next Story