உ.பி.யில் நாய் குரைத்ததால் கோஷ்டி மோதல் - பெண் சாவு; 5 பேர் காயம்


உ.பி.யில் நாய் குரைத்ததால் கோஷ்டி மோதல் - பெண் சாவு; 5 பேர் காயம்
x

உத்தரபிரதேசத்தில் நாய் குரைத்ததால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

பல்லியா,

உத்தரபிரதேச மாநிலத்தின் பைரியா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நாய் குரைத்ததால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலானது.

இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 6 பேர் காயம் அடைந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் லால் முனி என்ற 50 வயது பெண்மணி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story