தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கு 5 சதவீதம் வரி; ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு


தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகளுக்கு 5 சதவீதம் வரி; ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்க முடிவு
x

தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங்களுக்கு 5 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் வருகிற 11-ந் தேதிநடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங்களுக்கு 5 சதவீதம் வரி விதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சில தியேட்டர்களில் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வரும் நிலையில் நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஒரே மாதிரியாக 5 சதவீதம் வரி விதிக்க வேண்டுமென மத்திய, மாநில வரித்துறை அதிகாரிகள் அடங்கிய பிட்மென்ட் கமிட்டி, கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன் பேரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் இது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கவுள்ளது.

அதேபோல் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அரிதான நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு மருத்துவ நோக்கங்களுக்கான உணவு இறக்குமதிக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் கவுன்சில் முடிவு செய்யும் என கூறப்படுகிறது. தற்போது அத்தகைய மருந்து மற்றும் உணவு இறக்குமதிக்கு 5 முதல் 12 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story