ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் பன்மடங்கு உயர்வு! - மத்திய நிதியமைச்சகம் தகவல்


ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் பன்மடங்கு உயர்வு! - மத்திய நிதியமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 1 Aug 2022 5:23 PM IST (Updated: 1 Aug 2022 5:24 PM IST)
t-max-icont-min-icon

ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபின் 2வது முறையாக இவ்வளவு அதிகபட்ச வருவாய் கிடைத்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் வசூல் மொத்தம் ரூ. 1,48,995 கோடியாகும்.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபின் 2ஆவது முறையாக இவ்வளவு அதிகபட்ச வருவாய் கிடைத்துள்ளது.

இதில் சிஜிஎஸ்டி ரூ. 25,751 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ. 32,807 கோடி, ஐஜிஎஸ்டி ரூ. 79,518 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 41,420 கோடி). செஸ்வரி ரூ. 10,920 கோடி (சரக்குகளின் இறக்குமதி மீதான ரூ. 995 கோடி) அடங்கும்.

கடந்தாண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,16,393 கோடியாக இருந்த நிலையில், அதைவிட 28 சதவீதம் இந்த மாதம் அதிகமாக உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஜூலை மாதத்தில் ரூ.6,302 கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், இந்தாண்டு ஜூலை மாதத்தில் 34 சதவீதம் அதிகரித்து, ரூ.8,449 கோடியாக வசூலாகியுள்ளது.

கடந்த 5 மாதங்களில் மாதாந்திர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.4 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பது ஒவ்வொரு மாதமும் சீரான அதிகரிப்பை காட்டுகிறது என நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story